Friday, October 7, 2011

மனித உரிமைகளை பேணிப் பாதுகாப்பதற்கான முதலாவது செயற்திட்டம் அரசாங்கத்தினால் நேற்று அங்குரார்பணம் செய்யப்பட்டது-மஹிந்த சமரசிங்க!

Friday, October 07, 2011
மனித உரிமைகளை பேணிப் பாதுகாப்பதற்கான முதலாவது செயற்திட்டம் அரசாங்கத்தினால் நேற்று அங்குரார்பணம் செய் யப்பட்டது.

மனித உரிமைகளை பாது காத்தல் மற்றும் மனித உரிமை ஊக்கமளித்தல் செயற்பாடுகளுக்கான முதலாவது தேசிய செயற்திட்டத்தை அரசாங்கம் நேற்று ஆரம்பித்தது. நாடெ ங்கிலும் முழுமையாக மனித உரிமைகளை தொடர்ந்தும் பேணிப் பாதுகாப் பதற்கும் இத்திட்டம் வழிவகுக் கின்றது.

சிறந்த இலக்குகளையும் இதற்கான முன்னுரிமைகளையும் கொடுத்து மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான இத்திட்டம் ஒரு உந்து சக்தியாக அமையுமெ ன்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளுக்கான செயற்திட்டம் தொடர்புடைய இந்த ஆவணத்தை நாங்கள் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருக்கும், இவ்வாணைக்குழுவில் அங்கத்துவம் அளிக்கும் சகல நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்படு மென்றும் கூறினார். இந்த செயற்திட்டம் அரச சார்ப்பற்ற அமைப்புகளுக்கும், இது தொடர்பான சகல அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படுமென்றும் கூறினார்.

இலங்கை அரசாங்கம் காலத்திற்கு காலம் தனது மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கான செயற்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து யு. என். எச். சி. ஆர். உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படும் மனித உரிமைகளை பாதுகாத்து, ஒளிவு மறைவின்றி பகிரங்கமாக அறிவிப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் கூறினார்.

இந்த மனித உரிமைகளுக்கான செயற்திட்டம் 8 வெவ்வேறு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை,

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள், பெண் உரிமை, பொருளாதார சமூக கலாசார உரிமைகள், தொழிலாளர்களின் உரிமைகள், வெளிநாட்டில் வேலை செய்யும் ஊழியர்களின் உரிமைகள், உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களின் உரிமைகள், சித்திரவதையை தடைசெய்தல், சிறுவர் உரிமைகள் ஆகியன.

No comments:

Post a Comment