Friday, October 7, 2011

உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் 22,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவர்-பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன!

Friday, October 07, 2011
உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் 22,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவர் என தேர்தலுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார்.

நீதி, நேர்மையான தேர்தலை நடத்துவதற்குரிய சகல நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தேர்தல் நியதிகளை மீறியமை தொடர்பாக இதுவரை மிகவும் சொற்பமுறைப்பாடுகளே கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தேர்தலில் முக்கிய தினங்களாகக் கருதப்படும் நாளையும் நாளை மறுதினம் வாக்களிப்புத் தினத்திலும் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்ட அவர் 18 விசேட பொலிஸ் குழுக்களை நியமித்து கடமையில் ஈடுபடுத்தியுள்ள தாகவும் தெரிவித்தார்.

நாளை 8ம் திகதி நடைபெறவுள்ள 23 உள்ளூராட்சிச் சபைகளுக்குமான தேர்தல் நடவடிக்கைகளுக்கான பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சிச் சபைத் தேர்தலையொட்டிய வன்முறைச்சம்பவங்களில் இதுவரை 194 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 45 வாகனங்களும் கைப்பற்றப் பட்டுள்ளன.

வழமையான தேர்தல்களோடு ஒப்பிடும் போது இம்முறை வன்முறைகள் வெகுவாகக் குறைந்துள்ளதுடன் சிறு சிறு சம்பவங்களே பதிவாகியுள்ளன. 93 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் இதுவரை பொலிஸாருக்குக் கிடைத்துள்ளதுடன் இச்சம்பவங்கள் தொடர்பிலேயே 194 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment