Friday, October 28, 2011
மதுரை : மதுரையிலிருந்து கேரளாவிற்கு ரத யாத்திரை செல்லும் அத்வானியை கொல்வதற்காக பாலத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை போலீசார் கைப்பற்றி அழித்தனர். சரியான நேரத்தில் இதை கண்டுபிடித்து போலீசார் அகற்றியதால் அத்வானி உயிர் தப்பினார். இதையடுத்து அவரது பயணத்திட்டம் மாற்றப்பட்டது. பாஜ மூத்த தலைவர் அத்வானி ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார். பீகாரில் யாத்திரையை துவங்கி பல்வேறு மாநிலங்களுக்கு சென்ற அவர் நேற்று டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தார். மதுரை தமிழ்ச் சங்கம் ரோட்டிலுள்ள தனியார் ஓட்டலில் தங்கிய அவர் நேற்றிரவு மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். பின்னர் ஓட்டலுக்கு திரும்பி இரவில் ஓய்வெடுத்தார். இன்று காலை 7 மணிக்கு ஓட்டலில் இருந்து புறப்பட்ட அத்வானி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார். சுமார் ஒரு மணி நேரம் தரிசனம் செய்தார். அத்வானியுடன் அவரது மகள் பிரதிபா, கட்சி நிர்வாகிகள் முரளிதரராவ், சிவசங்கர் பிரசாத், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் உடன் சென்றனர். காலை 10.15 மணிக்கு ரத யாத்திரையை தொடங்கினார்.
மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே ரதத்தை நிறுத்திய அத்வானி அங்கிருந்த முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து திருப்பரங்குன்றம், திருமங்கலம், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், செங்கோட்டை வழியாக திருவனந்தபுரம் செல்ல திட்டமிட்டிருந்தார். அத்வானி வருகையை முன்னிட்டு அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் மெயின் ரோட்டில் திருமங்கலத்தை அடுத்த ஆலம்பட்டி கிராமம் அருகே உள்ள தரைப்பாலத்தின் அடியில் வெடிகுண்டு இருப்பதாகவும், பேட்டரியுடன் ஒயர்கள் இணைப்பு தரப்பட்டுள்ளதாகவும் போலீசுக்கு போனில் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த எஸ்பி அஸ்ரா கார்க், கூடுதல் எஸ்பி மயில்வாகனன், திருமங்கலம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் குவிந்தனர். அதிரடி சோதனையில் பாலத்தின் அடியில் 6 அடி நீளமுள்ள 2 பிளாஸ்டிக் பைப்புகள் கிடந்தன. இந்த பைப்புகளுக்கு ஒயர் மூலம் இணைப்பு வழங்கப்பட்டு, அந்த ஒயர் பேட்டரியில் இணைக்கப்பட்டிருந்தது. பைப்களுக்குள் வெடி மருந்துகள் நிரப்பப்பட்டிருந்ததை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து மதுரையிலிருந்து வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு எஸ்ஐ செல்லப்பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் வெடி மருந்து நிரப்பிய பைப்புகளை பாதுகாப்பாக பாலத்தின் அடியிலிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு ஒயர் இணைப்பை பேட்டரியிலிருந்து துண்டித்து வெடிகுண்டை செயல் இழக்கச் செய்தனர். இந்த வெடிமருந்து எந்தளவிற்கு சக்தி வாய்ந்தது என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஜெலட்டின் குச்சிகள் இணைக்கப்பட்டிருந்ததா என்றும் ஆய்வு நடக்கிறது. தென் மண்டல ஐஜி ராஜேஸ்தாஸ் சம்பவ இடத்தை பார்வையிட்டார். போலீசாருக்கு சரியான நேரத்தில் தகவல் கிடைத்ததால் பெரிய அளவிலான அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அத்வானியை கொல்ல நடந்த சதியும் முறியடிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் பல இடங்களில் ஏராளமான தரைப்பாலங்கள் உள்ளன. இங்கெல்லாம் உடனே போலீசார் குவிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அத்வானி செல்லும் வழி நெடுகிலும் போலீசார் நிறுத்தப்பட்டனர்.
ஆனாலும் இந்த வழி அத்வானிக்கு பாதுகாப்பானதாக இருக்காது என்பதால் பயண பாதையை மாற்றியமைக்க போலீசார் திட்டமிட்டனர். பாஜ மேலிடத்தலைவர்கள் மூலம் ஓட்டலில் இருந்த அத்வானிக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பயணம் அரை மணி நேரம் தாமதமானது. மேலும் போலீசார் தாங்கள் சொல்லும் வழியில்தான் அத்வானி செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதையடுத்து திருமங்கலத்திலிருந்து டி.கல்லுப்பட்டிக்கு பதிலாக விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை வழியாக அத்வானி திருவனந்தபுரம் செல்கிறார்.

No comments:
Post a Comment