Friday, October 28, 2011
சரத் பொன்சேகா மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் தமது சொந்த நலன்களுக்காக போட்டி போட்டுக்கொள்கின்ற நிலையில் பொன்சேகா விவகாரம் சிக்கல் நிறைந்த, கடினமான விடயமாக உள்ளது என அமெரிக்கத் தூதர், வாசிங்டனுக்கு எழுதியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகா, இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதம தளபதியாகச் செயற்பட்ட காலப்பகுதியில் இறுதியாக அமெரிக்கா சென்று சிறிலங்கா திரும்பிய பின்னர் ஏற்பட்ட நிலவரங்கள் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிக்கையிட்டிருந்தது.
2009 நவம்பர் 06 ல் எழுதப்பட்ட தகவல்களை பிரதித் தூதுக்குழு அதிகாரி வலேரி பவ்லர் (Valerie Fowler) இரகசியமானது என அடையாளப்படுத்தியிருந்தார்.
இது தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்திகளை கொழும்பு டெலிகிராவ் என்னும் ஊடகம் வெளியிட்டுள்ளது.
நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் கொழும்பில் வெளியிடப்பட்ட ஊடகங்களில் சரத் பொன்சேகாவின் அமெரிக்காப் பயணமே முக்கியத்துவப்படுத்தப்பட்டிருந்தது.
இலங்கைல் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டப் போரில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றங்கள் தொடர்பாக சரத் பொன்சேகாவிடம் விசாரணை செய்ய முயன்றதுடன் ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிரான பொன்சேகாவின் வாக்குமூலத்தைப் பயன்படுத்த அமெரிக்கா முயன்றதாகவும் இலங்கைல் பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர் என அமெரிக்கத் தூதுவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கத் தூதுவர் நவம்பர் 03 அன்று இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து சரத் பொன்சேகா தொடர்பான விடயத்தை அவருடன் கலந்துரையாடியதாகவும், இது இலங்கை அதிபரிற்கு எதிராக ஜே.வி.பியால் பயன்படுத்தப்படலாம் எனவும் கோத்தபாய, அமெரிக்கத் தூதரிடம் தெரிவித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதருடனான சந்திப்பொன்றில் சிறிலங்காவின் தற்போதைய இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியா, அமெரிக்காவிற்கு பயணம் செய்வது தொடர்பாக தற்போது தான் எந்தவொரு திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்ததாகவும் அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உள்ளகப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுடன் ஜெனரல் சரத் பொன்சேகா நேர்காணலை மேற்கொண்டது தொடர்பாக அவர் சிறிலங்காவிற்குத் திரும்பிய பின்னரே தனது அரசியல் உயர்மட்டத்திற்கு இது தொடர்பாக தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் விசாரணை செய்ய விருப்பம் கொண்டுள்ளது என்கின்ற இந்தச் செய்தியை சரத் பொன்சேகாவோ அல்லது அவருக்கு நெருக்கமான வேறு யாரோ சிறிலங்கா ஊடகங்களிற்குக் கசிய விடத் தீர்மானித்திருந்தனர்.
கடமைமிக்க இராணுவ வீரன் ஒருவன் தனது தளபதிக்கு தகவலை வழங்கியது போன்று காண்பிப்பதற்காக, சரத் பொன்சேகா யுத்தக் குற்றங்கள் தொடர்பாகப் பதிலளிக்கும் பொறுப்பிலிருந்து தான் நீங்கிக் கொண்டு அதற்கு கோத்தபாயவே பொறுப்பு எனச் சாட்டுதல் செய்வதை நோக்காகக் கொண்டு இவ்வாறு செய்திருக்கலாம்.
அதேவேளை, சரத் பொன்சேகாவை தனது அரசியல் போட்டியாளர் என்கின்ற காரணத்தினால் அவரைத் தோற்கடிக்கவே மஹிந்த ராஜபக்ச விரும்பியிருந்தார். ஆனால் பொன்சேகாவைக் கைது செய்வதன் மூலமோ அல்லது தன் மீதான போர்க்குற்ற வழக்குகள் தொடர்பாக அழுத்தங்களை மேற்கொண்டுவரும் வெளிநாட்டிற்குக் கடத்துவதன் மூலமோ அவரைத் தோற்கடிக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ச விரும்பியிருக்கவில்லை.
இருந்தும் பொன்சேகாவை விரைவில் நாடு திரும்ப வைக்க வேண்டும் என்பதையே அவர்கள் விரும்பினார்கள்.
அத்துடன் அமெரிக்க அரசாங்கத்திற்குள் இருப்பவர்கள் எவராவது மஹிந்த ராஜபக்சவை அவரது பதவியிலிருந்து தூக்கி வீச விரும்பியதால் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கலாம் என சிறிலங்காவில் உள்ள பலர் கருதுகின்றனர் என அமெரிக்கத் தூதர் புட்டெனிஸ் மேலும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment