Friday, October 07, 2011புதுடில்லி : "இந்திய வெளியுறவுத்துறை செயலர் ரஞ்சன் மத்தாய், உலக, பிராந்திய மற்றும் இரு தரப்பு உறவுகள் குறித்து பேசுவதற்காக இந்த வார இறுதியில் இலங்கைக்கு செல்ல உள்ளார்' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு செல்லும் இந்திய வெளியுறவு துறை செயலர் ரஞ்சன் மத்தாய், அங்கு, இலங்கை அதிபர் ராஜபக்ஷே, அரசு அதிகாரிகள், எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் தமிழ் தேசிய கூட்டணி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களை சந்தித்து, உலக, பிராந்திய மற்றும் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.
வடஇலங்கையின் பல்வேறு இடங்களில் இந்திய அரசின் உதவியுடன் மேம்பாடு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். இலங்கையில் 7ம் தேதி நடக்கும் நான்காவது இந்தியா - இலங்கை மீனவர்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவு குறித்து ரஞ்சன் மத்தாய் மதிப்பாய்வு செய்வார் என இந்திய வெளிவிவகாரத்துறை தெரிவித்துள்ளது....
இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சித் மாத்தாய், வடபகுதியில் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டங்கள், புகையிரதப் பாதை அமைப்புப் மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணிகளை நேரில் சென்று பார்த்துவிட்டு திட்ட முன்னெடுப்பு குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளராகப் பதவியேற்றிருக்கும் ரஞ்சித் மாத்தாய், கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் நாளைய தினம் முதன் முதலாக இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.
இலங்கை வரும் இவர் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (9) வடபகுதிக்கு விஜயம் செய்யவிருப்பதாக இந்திய உயர் ஸ்தானிகராலய உயரதிகாரியொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
இந்தியாவின் உதவியுடன் வடபகுதியில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள், புகையிரதப் பாதை அமைக்கும் பணிகள் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளை அவர் நேரடியாகச் சென்று பார்வையிட விருப்பதுடன், திங்கட்கிழமை கொழும்பில் அரசியல் பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தையில் அரசாங் கத்துடன் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை களின் நிலைமைகள் குறித்து விளக்கமளிக்க விருப்பதாக தெரிவத்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து தாம் அவருடன் கலந்துரையாடவிருப்பதாக தினகரனுக்கு தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது அரசாங்க பிரதிநிதிகள், எதிர்க் கட்சித் தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சந்திக்க விருப்பதாக இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரி தெரிவித்தார்.
No comments:
Post a Comment