Thursday, October 13, 2011
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னையில் உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என்று தூத்துக்குடியில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி, நெல்லை, மதுரை மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று பகல் 12.05 மணிக்கு தூத்துக்குடி வந்தார். அவருடன் சசிகலா, அமைச்சர் செங்கோட்டையன் வந்தனர்.
சிறிது நேரம் ஓய்வு எடுத்த ஜெயலலிதா, பின்னர் ஹெலிகாப்டரில் தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள ஜோதிநகரில் வந்திறங்கினார். அங்கிருந்து காரில் அண்ணாநகர் வந்தார். அங்கு அதிமுக மேயர் வேட்பாளர் சசிகலா புஷ்பா மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டு கவுன்சிலர் வேட்பாளர்கள், உள்ளாட்சி தேர்தலில் மாவட்டம் முழுவதும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உங்களிடம் வைத்த அன்பான வேண்டுகோளை ஏற்று திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் மக்கள் ஆட்சி மலர செய்துள்ளீர்கள். தமிழகம் தற்போது அமைதி பூங்காவாக திகழ்கிறது. நில அபகரிப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண 25 சிறப்பு கோர்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.655 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் மின்குறை மாநிலமாக இருந்து வந்தது. இதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு படிப்படியாக மின்வெட்டு குறைந்துள்ளது. அடுத்த ஆண்டுக்குள் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். கூடங்குளம் பிரச்னையை பொறுத்தவரை மக்கள் கருத்துக்கு தமிழக அரசு மதிப்பளிக்கும். இந்தப் பிரச்னையில் எப்போதும் உங்களில் ஒருத்தியாக இருப்பேன்.
தூத்துக்குடியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க 4-வது பைப் லைன் திட்டம் துவக்கப்படும். ஒளிவு மறைவற்ற நிர்வாகம் செயல்பட, அதிமுக மேயர் வேட்பாளர், உள்ளாட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்களியுங்கள். இவ்வாறு ஜெயலலிதா பேசினார். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் நெல்லை சென்ற ஜெயலலிதா, டவுன் வாகையடி முனையில் நடந்த கூட்டத்தில் நெல்லை மாநகராட்சி அதிமுக வேட்பாளர் விஜிலா சத்யானந்தை ஆதரித்து பேசினார்.

No comments:
Post a Comment