Sunday, October 23, 2011ஆட்பதிவுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் அடையாள அட்டையி்ல் மேலும் பல தகவல்கள் உள்ளடக்கப்படவுள்ளன. பாதுகாப்புத் தொடர்புடைய முக்கிய தகவல்களைக் கொண்டதாக இந்த ஆள் அடையாள அட்டைகள் எதிர்காலத்தில் விநியோகிக்கப்படவுள்ளன.
அத்துடன் இந்த ஆள் அடையாள அட்டைகள் நவீனத்துமாக டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்படவுள்ளதாகவும் ஆளடையாள அட்டைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. ஒருவர் இந்த அடையாள அட்டையை முதல் தடவையில் இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறின. (இக்னேஷியஸ்)
No comments:
Post a Comment