Sunday, October 23, 2011

வடக்கு கிழக்கு காணிப் பதிவு நடநவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் த.தே.கூட்டமைப்பு மனுவொன்றை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது!

Sunday, October 23, 2011
வடக்கு கிழக்கு காணிப் பதிவு நடநவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு கட்சி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது.

நாளைய தினம் உச்ச நீதிமன்றில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

வடக்கு கிழக்கு காணிப் பதிவு குறித்து அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உரிய பதிலளிக்கப்படவில்லை எனவும், இதன் காரணமாக அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு காணிப் பதிவு குறித்து கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் விவாத் நடத்தப்பட்டது.

காணிப்பதிவு நடவடிக்கைகளை அரசாங்கம் நியாயப்படுத்தி வருவதகாக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு காணிப் பதிவு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் வவுனியாவில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்து நல்லிணக்கப் பணிகளை மேற்கொண்டதன் பின்னர் அரசாங்கம் இவ்வாறான காணிப்பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment