Sunday, October 23, 2011

காணி ஆணையாளர் சட்டவிரோதமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன்!

Sunday, October 23, 2011
காணி ஆணையாளர் சட்டவிரோதமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்களுக்கு சட்டவிரோதமான சுற்று நிருபம் ஒன்றை காணி ஆணையாளர் அனுப்பி வைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கைக் காணிப் பதிவு சட்டங்களுக்கு முரணான வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கில் நீதிமன்றங்கள் சீராக இயங்கி வருவதாகவும் இதனால் தேவையற்ற உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சட்ட விவகாரங்களில் அரசாங்கம் தேவையின்றி தலையீடு செய்யக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். காணி உறுதி தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு அரசியல் சாசனத்திற்கு புறம்பான வகையில் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment