Saturday, October 8, 2011

கொலன்னாவை பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகம் தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்பு!

Saturday, October 08, 2011
முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முல்லேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர, அவரது மெய்ப்பாதுகாவலர் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டுள்னளர்.

இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவிற்கு சற்று முன்னர் சத்திசிகிச்சை நடைபெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்திரசிகிச்சையின் பின்னரே அவரது நிலைமை பற்றி உறுதியாக எதனையும் குறிப்பிட முடியும் என மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் மெக்ஸி புரொக்டரும், இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்புவாரச்சியும் தெரிவித்துள்ளனர்.

முல்லேரியா பிரதேசத்தில் மேலதிக பாதுகாப்பிற்காக இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முல்லேரியா பிரதேசத்திற்கு உட்பட்ட காவல்துறை பிரிவில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இரவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் ஆதரவாளர்களுக்கும், பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் இன்று பிற்பகல் 3.30 அளவில் மோதல் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, முல்லேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாக்கத்தை ஏற்படுத்தாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திட்டமிட்டவாறு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்..

கொழும்பு மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார்!

வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் கொழும்பு மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்திர சிகிச்சையின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் தலையில் இருந்து இரண்டு துப்பாக்கி சன்னல்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment