Friday, October 21, 2011

முடியாதென்ற ஆவணம் நியூயோர்க் நீதிமன்றத்தில் தாக்கல்!

Friday, October 21, 2011
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதிவதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணத்தை, சில்வாவின் சட்டத்தரணிகள் நியூயோர்க் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளனர்.

வியன்னா இணக்கப்பாடுகளுக்கு அமைய தூதரக அதிகாரிகளுக்கு உள்ள சிறப்புரிமையின் கீழ், சவேந்திர சில்வா அடங்குவதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தனது ஆவணத்தில் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்த புலிகளின் முன்னாள் தலைவர் ரமேஷின் மனைவியான வத்சலாதேவி என்பவர், சவேந்திர சில்வாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார். வத்சலாதேவி தென்னாப்பிரிக்காவில் இருப்பதாக கூறினாலும், அவர் லண்டனில் இருப்பதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment