Friday, October 14, 2011

போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் கமிஷனர் அவசர ஆலோசனை!.

Friday, October 14, 2011
சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் கமிஷனர் அய்யர் இன்று ஆலோசனை நடத்தினார். டிஜிபி ராமானுஜம், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் டிஜிபி காந்திராஜன், வடக்கு மண்டல ஐஜி சைலேந்திரபாபு, ஐஜி (தேர்தல்) அலெக்சாண்டர், எஸ்பி (தேர்தல்) மோகன், கூடுதல் துணை கமிஷனர் விமலா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு இயந்திரம் மற்றும் வாக்குப்பெட்டிகளுக்கு அளிக்கப்பட உள்ள பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்பட்டது. தேர்தலில் விறுப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளிடம் மாநில தேர்தல் கமிஷனர் அய்யர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment