Friday, October 21, 2011
இலங்கையின் மனித உரிமை முன் னேற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத் திற்கு தெளிவுபடுத்த உள்ளதாக ஜெனீவா சென்றுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச பாராளுமன்ற மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினைகள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த முறைப்பாடுகள் தொடர்பாக அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் இலங்கை அரசாங்கம் சார்பாக விளக்கமளித்துள்ளனர்.
இலங்கை அரசாங்கம் சார்பாக விளக்கமளித்ததன் பின்னர் இலங்கை தொடர்பாக எதுவித பிரச்சினையும் ஏற்படவில்லையென அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவிலிருந்து தெரிவித்தார்.
ஒக்டோபர் 24 ஆம் திகதி முதல் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மூன்றாம் கமிட்டிக் கூட்டத்திற்கு இலங்கை சார்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்துகொள்ள உள்ளதுடன், ஒக்டோபர் 26 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன் விசேட கலந்துரையாடலிலும் கலந்துகொள்ள உள்ளார்.
அதன்போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கையின் மனித உரிமை துறையின் தற்கால முன்னேற்றம் தொடர்பாகவும் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் நிகழ்வுகள் மற்றும் தருஸ்மன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பற்றியும் பான் கீ மூனிடம் விளக்கமளிக்க உள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் மூன்றாம் குழுக் கூட்டத்தின் போது அங்கத்துவ நாடுகளின் மனித உரிமைகள் பற்றி கலந்துரையாட உள்ளதுடன், அதன்போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கை நிலை பற்றி விசேட உரையாற்ற உள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து இதன்போது விளக்கமளிக்கவும் உள்ளார்.

No comments:
Post a Comment