Monday, October 10, 2011

அரசியல் அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ள லியம் பொக்ஸ்!

Monday, October 10, 2011
பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சுடன் எதுவித தொடர்புமற்ற ஒருவரை அந்த நாட்டின் பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் இலங்கை ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போது கலந்துகொள்ளச் செய்தமை, காணொளி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளதாக பீ.பீ.சி உலக சேவை குறிப்பிடுகின்றது.

இதனையடுத்து லியம் பொக்ஸ் கடும் அரசியல் அழுத்தங்களை எதிர்நோக்கியிருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தனது நெருங்கிய நண்பரான அடம் வெரிட்டி என்பவரயே ஜனாதிபதியுடனான பேச்சுவார்தையில் பங்குபற்றச் செய்ததாக லியம் பொக்ஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் அத்தகைய ஒருவரை தாம் பங்குபற்றச் செய்யவில்லை என இதற்கு முன்னர் குற்றச்சாட்டுத் தொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு செயலாளரிடம் வினவியபோது தெரிவித்திருந்தார்.

எனினும் இது குறித்த காணொளிக் காட்சிகள் வெளியானதை அடுத்து பிரித்தானிய வெளிவிவகார செயலாளரின் கருத்து நேர் எதிரானது என்றும் பீ.பீ.சி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் டேலிட் கெமரன் இந்த சர்ச்சை தொடர்பாக லியம் பொக்ஸிடம் வினவியுள்ளார்.

அமைச்சரவை விதிகள் மீறப்பட்டுள்ளனவா என்பது தொடர்பாக ஏற்கனவே விசாரணைகள் நடைபெறுவதுடன், அதன் ஆரம்ப கட்ட அறிக்கை பிரித்தானிய பிரதமரால் இன்று பரிசீலிக்கப்படவுள்ளதாகவும் பீ.பீ.சி உலகசேவை மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment