Saturday, October 15, 2011

இங்கிலாந்து நாட்டின் புதிய ராணுவ அமைச்சராக பிலிப் ஹேமண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்!

Saturday, October 15, 2011
லண்டன் : இங்கிலாந்து நாட்டின் புதிய ராணுவ அமைச்சராக பிலிப் ஹேமண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் ராணுவஅமைச்சராக கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த லியாம் பாக்ஸ் பதவி வகித்து வந்தார். இவர் தன்னுடைய பதவி காலத்தில் தன் நெருங்கிய நண்பர் ஆதம் வெரைட்டிக்கு சலுகை தந்ததுஉட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்க ஆளானார். இதனையடுத்து தன்னுடைய பதவியை ராஜினாமா ‌செய்ய முடி வு செய்து அதற்கான கடிதத்தை பிரதமர ‌டேவிட் கேமரூனிடம் வழங்கினார். பாக்ஸ் விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர் டேவிட் கேமரூன் தங்களின் உண்மையான விளக்‌கத்தை ஏற்றுக்கொள்கிறேன் , நீங்கள் பதவி விலகுவது வருத்தத்திற்குரியது என தெரிவித்தார். பாக்ஸ் விலகலுக்கு பின்னர் புதிய அமைச்சராக 55 வயதாகும் பிலிப் ஹேமண்ட் நியமி்க்கப்பட்டுள்ளார்.இவர் மே 2010-ம் ஆண்டில் கூட்டணி கட்சி களின் சார்பில் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். கடந்த 97-ல் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து வர்த்தகதுறை ,உற்பத்திதுறை மற்றும் இயற்கை எண்ணெய், எரிவாயு ,கட்டுமான பணிகளில் பணிபுரிந்துள்ளார்.

No comments:

Post a Comment