Tuesday, October 25, 2011

மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள பாதுகாப்பின்மை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வசந்தி அரசரத்தினத்திற்கும் மகிந்தஹத்துருசிங்கவுக்கும் இடையில் நடைபெற்றது!

Tuesday, October 25, 2011
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சு. தவபாலசிங்கம் தாக்கப்பட்டமை தொடர்பில் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள பாதுகாப்பின்மை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினத்திற்கும் யாழ் மாவட்ட தளபதி மகிந்தஹத்துருசிங்கவுக்கும் இடையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சந்திப்பில் மாணவர்கள் எந்த விதமான அச்சமுமின்றி கல்வியைத் தொடரலாம் என்று மகிந்த ஹத்துருசிங்க தலைமையிலான பாதுகாப்புத் தரப்பினர் துணைவேந்தருக்கு உறுதியளித்துள்ளதாக யாழ் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படைத்தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் படைத் தரப்பினருக்கும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் திட்டத்திதுடன் வெளிசக்திகள் இவ்வாறான முயற்சிகளை எடுப்பதாகவும் மாணவர்கள் அச்சமின்றி தமது கல்வியை தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பலாலி இராணுவத் தலைமையகத்தில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம் தலமையிலான குழுவினருக்கும் யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மகிந்தஹத்துருசிங்ன தலமையிலான இராணுவத்திற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் பகிஸ்கரிப்புப் போராட்டம் தொடரும் நிலையில் கிளிநொச்சியை சேர்ந்த மற்றுமொரு மாணவன் தாக்கப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. பரந்தன் பூநகரி வீதியில் ஆர்.கவிதாஸ் என்ற மாணவன் இரும்பு பொல்லுகளால் தாக்கப்பட்டதாக மாணவர் ஒன்றியத் தலைவர் தவபாலசிங்கம் இன்று மாலை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment