Monday, October 10, 2011

மாத்தாய் ஜனாதிபதியை சந்திக்கிறார்!

Monday, October 10, 2011
இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாத்தாய் இன்றைய தினம் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெறவிருந்த போதிலும் அது இடம்பெறவில்லை.

இந்த நிலையில், இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாத்தாய்க்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கம் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது...

வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் காணி அளவை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த உதவுறுமாறு இந்தியாவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் பதிய மாவட்ட செயலகங்களை அமைப்பதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய்க்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து ரஞ்சன் மாத்தாயுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். சந்தேகத்திற்கு இடமான வகையில் காணி அளவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இதனை ஓர் இன அடிப்படையிலான செயலாக கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய மாவட்டச் செயலகம் ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் பிரதேச சனத்தொகைப் பரம்பலில் மாற்றம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வுத் திட்டமொன்றை நோக்கி அரசாங்கம் நகரும் வரையில் பேச்சுவார்த்தைகளைத் தொடர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து அரசாங்கத்துடன் கூட்டமைப்பு நடத்தி வரும் பேச்சுவார்த்தைகள் மகிழ்ச்சி அளிப்பதாக ரஞ்சன் மாத்தாய் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment