Tuesday, October 11, 2011

வடமாகாணத்தில் 79 பாடசாலைகளை மீளமைக்கும் செயற்றிட்டத்தினை இந்திய அரசு பொறுப்பேறுள்ளது!

Tuesday, October 11, 2011
வடமாகாணத்தில் 79 பாடசாலைகளை மீளமைக்கும் செயற்றிட்டத்தினை இந்திய அரசு பொறுப்பேறுள்ளது.

இதன்பொருட்டு 187 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானகரம் விடுத்துள்ள ஊடக செய்திக்குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் மீளமைக்கும் பணிகளை மேற்கொள்ள கட்டிட நிர்மாண நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருகின்றது.

குறிப்பாக வடமாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களில் அசாதாரண சூழ்நிலைகளின் போது பாதிக்கப்பட்ட பாடசாலைகள் இதன்போது புனரமைக்கப்படவுள்ளன.

இதுதொடர்பான ஒப்பந்தம் ஒன்று நேற்றையதினம் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா மற்றும் அமைச்சர் பசில் ராஷபக்ஸவிக்கு கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் அரசு சார்பில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபட்சவுடன் நேற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்;.

இந்த பேச்சுவார்த்தையின்போது வடக்கு கிழக்கில் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அப்போது விரிவாக ஆராயப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் 50 ஆயிரம் வீடுகள் அமைக்கும் இந்தியாவின் திட்டம் தொடர்பாக இரு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

மேலும் தமிழ் மக்களின் நிலைப்பாடு பற்றி ரஞ்சன் மத்தாய்க்கு, பஷில் ராஜபட்ச தெளிவுபடுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment