Sunday, October 23, 2011
சென்னை: தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, திரையரங்குகளுக்கு தீபாவளியை முன்னிட்டு வரும் 27, 28, 31, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் கூடுதலாக ஒரு காட்சி நடத்திக் கொள்ள அரசு அனுமதியளித்துள்ளது.
மேலும் வரும் 26, 29, 30 தேதிகள் அரசு விடுமுறையானதால் கூடுதலாக 5வது காட்சியாக நடத்திக் கொள்ளலாம். அதேபோல், நடமாடும் திரையரங்குகளுக்கு வரும் 26, 29, 30, ஆகிய தேதிகளில் காலை காட்சியும், 27, 28, 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் மேட்னி காட்சிகளை நடத்திக் கொள்வதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த விவரத்தை, கலெக்டர், கேளிக்கை வரி அதிகாரி களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து கூடுதலாக ஒரு காட்சியை நடத்திக் கொள்ளலாம்.
தியேட்டர் அதிபர்கள் நன்றி: தியேட்டர் உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அனைத்துத் தியேட்டர்கள் சார்பாகவும், பொதுமக்களின் சார்பாக வும் தீபாவளி பண்டிகை முதல் ஏழு நாட்களுக்கு (26.10.2011 முதல் 01.11.2011 வரை) அனைத்துத் தியேட்டர்களிலும் கூடுதல் காலைக் காட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத் தோம். அதை ஏற்று அனுமதி அளித்தமைக்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்‘‘ என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment