Saturday, October 8, 2011

54 ஆபிரிக்க நாடுகளில் 32 நாடுகளுடன் இலங்கை இராஜதந்திர உறவுகளைப் பேணிவருகிறது-கெஹலிய ரம்புக்வெல்ல!

Saturday, October 08, 2011
ருவண்டா அரசாங்கத்துடன் இலங்கை இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவுள்ளதாகவும் அதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் ருவண்டா அரசாங்கத்துடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தவுள்ளதால் கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை ருவண்டா அரசாங்கத்தின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்ததாவது:

வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் யோசனைக்கு அமைய ருவண்டா அரசாங்கத்துடன் இராஜதந்திர உறவுகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 54 ஆபிரிக்க நாடுகளில் 32 நாடுகளுடன் இலங்கை இராஜதந்திர உறவுகளைப் பேணிவருகிறது.

அதனை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற யோசனைக்கு அமையவே ருவண்டாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த தீர்மானித் துள்ளோம். அதேபோன்று ஆபிரிக்காவில் தோன்றியுள்ள புதிய அரசான தென் சூடானுடனும் இராஜதந்திர உறவுகளை மேற்கொள்வதற்கும் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment