Saturday, October 29, 2011

முன்னாள் புலிபோராளிகள் 400 பேர் நாளை மறுதினம் விடுதலை!

Saturday, October 29, 2011
புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சுமார் 400 பேர் நாளை மறுதினம் சமூகமயப்படுத்தப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.

எதிர்வரும் 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த குழுவினர் அவரவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்ரசிறி கஜதீர குறிப்பிட்டார்.

புனர்வாழ்வு நடவடிக்கைகளை பூர்த்தி செய்த சுமார் ஆயிரத்து 800 பேர் அண்மையில் ஜனாதிபதியினால் சமூகமயப்படுத்தப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான கல்வி, கலை மற்றும் விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்துவதற்குரிய திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.

இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான விசேட கடன் வசதிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிடுகிறார்.

பத்து வருடங்களில் மீளச் செலுத்தும் வகையில் 4 வீத வட்டி அடிப்படையில் அதிகபட்சமாக இரண்டரை இலட்சம் ரூபா வரை கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment