Friday, October 28, 2011
சென்னை: தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 3 பேரும் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். அவர்களுக்கு கருணை காட்டக் கூடாது. தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. வழக்கு விசாரணையை நவம்பர் 29-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு சென்னை பூந்தமல்லி தடா சிறப்பு கோர்ட் தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து 3 பேரும் தாக்கல் செய்த அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து, தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். இந்த கருணை மனுக்களை கடந்த ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து 3 பேருக்கும் செப்டம்பர் 9-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் வேலூர் சிறையில் நடந்து வந்தன. இதற்கிடையே, தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி, மூவர் சார்பிலும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கருணை மனுவை பரிசீலிக்க ஜனாதிபதி 11 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதை சுட்டிக் காட்டி, அந்த அடிப்படையில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர்.
இந்த மனுக்கள் ஐகோர்ட் நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. 3 பேர் சார்பில் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி, ஆஜராகி வாதிட்டார். அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள், மனுதாரர்களான சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற 8 வாரம் இடைக்கால தடை விதித்தனர். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு, 8 வார இடைவெளிக்கு பிறகு அதே நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் வக்கீல் வைகை ஆஜராகி, ‘‘இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது வரும் 18-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது’’ என்று தெரிவித்தனர்.
மத்திய அரசு சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி, உள்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
ராஜீவ் கொலை வழக்கில் 3 பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு, தூக்கு தண்டனை நிறைவேற்ற தேதி நிர்ணயிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு பிறகு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 3 பேரின் கருணை மனுவை ஜனாதிபதி ஏற்கனவே நிராகரித்துவிட்டார்.
கருணை மனுவை பரிசீலிக்க 11 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாகவும் அதை காரணமாக வைத்து தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டுள்ளது. கருணை மனுவை பரிசீலிப்பதற்கு காலக்கெடு எதையும் சுப்ரீம் கோர்ட் நிர்ணயிக்கவில்லை. கருணை மனுவை பரிசீலித்து முடிவு எடுக்க ஜனாதிபதிக்கு அரசியல் சட்டத்தில் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் கோப்புகளையும் தன்மையையும் ஆராய ஜனாதிபதி தேவையான காலக்கெடு எடுத்திருக்க கூடும். அவரது அதிகாரத்தில் கோர்ட் தலையிட முடியாது. எனவே, மனுதாரர்களுக்கு கருணை காட்ட வேண்டும் என்ற கோரிக்கையை கோர்ட் ஏற்கக் கூடாது. அரசியல் கட்சியினர் ஆதாயம் தேட இத்தகைய மனுக்களை தாக்கல் செய்கின்றனர். அவர்களின் அடிப்படை உரிமை எதுவும் மீறப்படவில்லை. காலதாமதத்தால் மனுதாரர்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது என்பதையும் ஏற்க முடியாது. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அவர்களுக்கு கருணை காட்டக் கூடாது. தண்டனையை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு மத்திய அரசு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை ஐ.ஜி., வேலூர் சிறை சூப்பிரண்ட் சார்பாக பதில் மனுக்களை தாக்கல் செய்தார். அதில், ‘தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து தீர்ப்பு கூறிய பிறகு, 2000-ம் ஆண்டே 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு தூக்கு தண்டனை நிறைவேற்ற தேதி நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு உயர்நீதிமன்றம் 8 வார காலம் தடை விதித்ததால் தண்டனையை நிறைவேற்றாமல் நிறுத்தி வைத்துள்ளோம். தமிழக கவர்னரும் இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியும் கருணை மனுவை நிராகரித்த பிறகு, இதுதொடர்பாக தமிழக அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. மத்திய அரசுதான் இதில் முடிவு எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இப்போது இல்லை. இந்த வழக்கில் மத்திய அட்டர்னி ஜெனரல் ஆஜராக இருப்பதால் அவகாசம் வேண்டும். எனவே, விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’’ என்று மத்திய அரசு வக்கீல் கேட்டுக் கொண்டார். இதைக் கேட்ட நீதிபதிகள், நவம்பர் 29-ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
* ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்
* விசாரணை நவ. 29-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

No comments:
Post a Comment