Wednesday, October 12, 2011

2ம் இணைப்பு-பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபருக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டு-கண்டித்து ஆர்ப்பாட்டம்!

Wednesday, October 12, 2011
யாழ்ப்பாணம் பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபருக்கெதிராக யாழ்.அரச அதிபர் எழுப்பியுள்ள பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்களைக் கண்டித்து ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றினை இன்று நடத்தியுள்ளனர்.

தமது கற்றல் செயற்பாட்டு விரிவுரைகளை பகிஸ்கரித்து இப்போராட்டத்தினை அவர்கள் நடத்தியிருந்தனர். பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபருக்கெதிராக அங்கு கல்வி கற்கும் மாணவ ஆசி;ரியர்கள் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்களை யாழ்.அரச அதிபரிடம் சமர்ப்பித்திருந்தனர். இதையடுத்து ஊடகங்களுக்கு அவற்றை அம்பலப்படுத்தியிருந்த அரச அதிபர் விசாரணைகளுக்கு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்ததார்.

இந்நிலையிலேயே அரச அதிபருக்கு எதிராக மாணவ ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றினை இன்று நடத்தியுள்ளனர். அங்கு கல்வி கற்கும் அறுபதுக்கும் மேற்பட்ட மாணவ ஆசி;ரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினில் பங்கெடுத்திருந்தனர். அவர்கள் அரச அதிபருக்n;கதிரான சுலோக அட்டைகளை தாங்கியிருந்தனர்.

பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபருக்கெதிராக யாழ்.அரச அதிபரால் சுமத்தப்பட்ட பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்களை நிருபிக்க வேண்டுமெனவும் தவறினால் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

இதனிடையே பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் மைத்துனரே பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபரான இக்னேனியஸ் என தெரியவருகின்றது.

ஏற்கனவே பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபராக வருவதற்கான தகுதியை பெற்றிருந்த இளங்கோ என்பரை பின்தள்ளி விட்டே இக்னேனியஸ் அதிபராகியிருந்ததாக கூறப்படுகின்றது. பிரதி அமைச்சர் கருணா அம்மானின் சிபார்சின் பேரிலேயே அதிபர் நியமனத்தை அவர் பெற்றுள்ளார்.

இம்முறைகேடு தொடர்பாக இளங்கோ இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினில் முறைப்பாடொன்றினை செய்துள்ளார். எனினும் இது தொடர்பாக கொழும்பில் இடம்பெற்ற விசாரணையொன்றுக்கு அவர் சென்ற வேளை விடுக்கப்பட்டதாக கூறப்படும் கொலை அச்சுறுத்தலையடுத்து அவர் முடங்;கிபபோயுள்ளார்.

No comments:

Post a Comment