Saturday, October 29, 2011

பொதுநலவாய நாடுகளின் கொடிகளுடன் 22வது மாநாடு பேர்த் நகரில் கோலாகலம்!

Saturday, October 29, 2011
பொதுநலவாய நாடுகளின் 22 வது அரச தலைவர்கள் மாநாடு நேற்று முற்பகல் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகர மாநாட்டு மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமானது

பேர்த் நகரம் முழுமையான பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன் பொதுநலவாய அங்கத்துவ நாடுகளின் கொடிகள் பேர்த் நகரில் பறக்கவிடப்பட்டிருந்தன.

இரண்டு நாட்களுக்கு நடைபெறும் அரச தலைவர்கள் மாநாட்டின் நேற்றைய ஆரம்ப நிகழ்வில் இலங்கையின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் திருமதி சிரந்தி ராஜபக்ஷவுடன் இலங்கை தூதுக்குழுவினர் பங்கேற்றனர்.

மகாநாட்டிற்கு வருகை தந்த அரச தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அவுஸ்திரேலிய ஆதி வாசிகள் அவர்களது கலாசார அம்சங்களுடன் வரவேற்றனர். அத்துடன் ஆரம்ப நிகழ்வில் வரவேற்புரையை ஆதிவாசிகள் நிகழ்த்திய துடன் மாநாட்டிற்கு வருகைதந்திருந்த அரச தலைவர்களுக்கு அவர்கள் தம் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரை யாற்றிய பிரிட்டிஷ் எலிசபெத் மகாராணி: இம்மாநாடானது உலக ரீதியில் சாதகமான தும் நிலைபேறானதுமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பெறுபேறுகளைக் கொண்டதாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மாநாட்டில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் புதிய தலைவியும் அவுஸ் திரேலிய பிரதமருமான ஜூலியாகிளார்ட் உரையாற்றினார். இம்முறை மாநாட்டில் உலக நிதி நெருக்கடி, உல வெப்பநிலை அதிகரிப்பு, காலநிலை மாற்றங்களுக்கு முகம்கொடுத்தல், அபிவிருத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் தமதுரையில் தெரிவித்தார்.

இம்மாநாட்டில் உரையாற்றிய பொதுநல வாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா: பொதுநலவாய நாடுகள் ஒரே நோக்கத்துடன் ஒரே தொனியுடனும் முன் செல்ல வேண்டியதன் முக்கியத்து வத்தை வலியுறுத்தினார்.

பொதுநலவாய அமைப்பின் முன்னாள் தலைவியும் டிரினிடாட் மற்றும் டுபோக்கோ அரசின் பிரதமருமான கம்லா பெர்ஷாட் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரை நிகழ்த்திய போது: இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வலுவூட்டுவது தொடர்பில் அரச தலைவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

பொதுநலவாய அமைப்பின் உரிமையாள ராக அல்லாது கடந்த இரண்டு ஆண்டு களிலும் அதன் பாதுகாவலராகச் செயலாற் றியதாகக் குறிப்பிட்ட அவர், அப்பொறுப்பை தற்போது அவுஸ்திரேலியாவுக்குக் கையளிப்பதாகத் தெரிவித்தார்.

மாநாட்டின் ஆரம்ப நிகழ்வையடுத்து மாநாட்டில் கலந்து கொண்ட அரச தலை வர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மாநாட்டின் முற்பகல் கூட்டத் தொடரில் உலக மற்றும் பொதுநலவாய நாடுகளின் அபிவிருத்தி தொடர்பான மீளாய்வும் பிற்பகல் கூட்டத் தொடரில் தேசிய மற்றும் உலக மறுமலர்ச்சி என்ற தலைப் பிலான விடயங்களும் கலந்துரையாடப் பட்டன.

இதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையிலீடுபட்டார்.

இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ பங்களாதேஷ¤க்கு மேற்கொண்டி ருந்த விஜயத்தை நினைவுகூர்ந்த அவர், அதற்காக தமது நன்றியைத் தெரிவித்ததுடன் 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டிற்குத் தேவை யான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கு வதாகக் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பானது இருநாடுகளுக்குமிடை யிலான நட்புறவை மேலும் வலுப்படுத் துவதாக அமைந்தது.

பொதுநலவாய நாடுகளின் அரச தலை வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசின் லூங்கிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்குமிடையில் நேற் றைய தினம் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.

இருநாடுகளுக்குமிடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் விடயங்கள் இங்கு பகிர்ந்துகொள்ளப்பட்டன.

இந்த சந்திப்பில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், சஜிஸ்வாஸ் குணவர்தன எம். பி. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீர துங்க, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை தூதுவர் அட்மிரல் திசர சமரசிங்க ஆகி யோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment