Friday, October 7, 2011

மூன்று அரசசார்பற்ற நிறுவனங்கள் (புலிகள் சார்பு) இணைந்து எதிர்வரும் 12 ம் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொலைக்களம் ஆவணப்படத்தை திரையிட தீர்மானம்!

Friday, October 07, 2011
மூன்று அரசசார்பற்ற நிறுவனங்கள் (புலிகள் சார்பு) இணைந்து, எதிர்வரும் 12 ஆம் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் செனல் 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட இலங்கையின் கொலைக் களம் வீடியோ ஆவணப்படத்தை திரையிட தீர்மானித்துள்ளன. இதற்கு இலங்கை அரசாங்கம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபை, இண்டர்நேஷனல் கிரைசீஸ் குறுப், மனித உரிமை கண்காணிப்பகம் என்பன இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளன. செனல் 4 தொலைக்காட்சியின் விவரணப்படத்தை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வெளியிடுவதற்காக ஐரோப்பாவில் உள்ள புலிகளின் வலையமைப்பு, குறித்த நிறுவனங்களுக்கு மூன்று மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளதாக திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஆவணப்படம் திரையிடப்பட்ட பின்னர், கலந்துரையாடல்களை நடத்துவதற்கு, செனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெலம் மெக்ரே, கிறீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மூவர், பல அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக செனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் விவரணப்படம் திரையிடப்பட உள்ளமை குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment