Sunday, October 02, 2011இந்தியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையான இலங்கை மீனவர்கள் 10 பேரையும் அவர்களுடைய இரண்டு படகுகளையும் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினர் இன்று இலங்கை கற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
காங்கேசன்துறை வடக்கேயுள்ள கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்கள் இந்திய கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் கடற்படையினரிடம் ஒப்படைத்ததாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இந்திய அதிகாரிகளால் விடுதலை செய்யப்பட்ட மேலும் 35 இலங்கை மீனவர்கள் நாளை தம்மிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கடற்படைபேச்சாளர் தெரிவிக்கிறார்.
இதேவேளை இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மேலும் 41 இலங்கை மீனவர்கள் அங்கு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment