ராஜீவ்காந்தி கொலையாளிகள் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரது தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும்:ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்ககூடாது என தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் லண்டனில் இந்திய தூதரகத்திற்கு முன்பாக கோரிக்கை விடுத்துள்ளார்!


Thursday,September,01,2011
லண்டனில் இந்திய தூதரகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ்காந்தி கொலையாளிகள்ளை சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரது தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என, தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் யாழ்-கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
லண்டனில் இந்திய தூதரகத்திற்கு முன்பாக நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்த நாடாளுமன்ற(புலிகளின்) உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலும் கூறுகையில்,
ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டு 21 வருடங்களுக்கு மேலாக இவர்கள் தண்டனை பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், மரணத்தைத் தீர்மானிக்கும் நிகழ்வுகளை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந் மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளும் இணைந்து இந்த (புலி)சகோதரர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்.
No comments:
Post a Comment