Tuesday, September 20, 2011

Terms of reference ஐ மாற்ற அரசு இணங்குமானால் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது குறித்து மீள்பரிசீலனை?.

Tuesday, September 20, 2011
Terms of reference ஐ மாற்றியமைப்பதற்கு அரசுத் தலைமை இணங்குமானால் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது குறித்து மீழ்பரிசீலனை? சம்பந்தன்

அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அரசு அமைக்குமாக இருந்தால், அதில் பங்கெடுப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சாதகமாகப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக தெரியவருகிறது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்கான நோக்கம் பற்றிய கருத்துரையை (Terms of reference) மாற்றியமைப்பதற்கு அரசுத் தலைமை இணங்குமானால் தெரிவுக்குழுவில் பங்குபற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தாங்கள் சாதகமாகப் பரிசீலிக்கத் தயார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக என நம்ப தகுந்த தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நடைபெற்ற இரகசிய சந்திப்பில் சம்பந்தன் இதனைத் தெரிவித்திருக்கிறார். சில இராஜதந்திர மட்டங்களின் முன் முயற்சி மற்றும் அழுத்தத்தினால் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

இந்தச் சந்திப்பின்போதே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவதற்கான நிலைமைகள் தொடர்பான தங்களது தரப்புக் கருத்து நிலைப்பாட்டை இரா.சம்பந்தன் வெளிப்படையாகவும், திட்டவட்டமாகவும் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளார்.

அரசுத் தரப்பில் பிரதான கட்சியான ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் தலைவர்களுக்கும், இடையில் தற்போது இடம்பெற்றுவரும் தீர்வு முயற்சிக்கான பேச்சுகள் ஒருபுறம் தொடரவேண்டும். அந்தப் பேச்சுகளில் எட்டப்படும் முடிவுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது யோசனையாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்வைக்கும். அதேசமயம், மறுபுறம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயலூக்கம் உள்ள ஒரு கட்சியாக முழு அளவில் பங்குபற்றவேண்டும்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தச் சந்திப்பின்போது சம்பந்தரிடம் வேண்டுகோள் விடுத்தாக கூறப்படுகிறது.


அப்போது, தெரிவுக்குழு அமைப்பதற்கான நோக்கம் குறித்து நாடாளுமன்றப் பத்திரத்தில் அரசுத் தரப்பு குறிப்பிட்டிருக்கும் கருத்துரையை (Terms of reference) கடுமையாகச் சாடி சம்பந்தன் கருத்துகளை முன்வைத்துள்ளார்.

போர் முடிந்துவிட்டது; சமாதானம் பிறந்துவிட்டது. நாட்டை அபிவிருத்தி செய்வது எப்படி என ஆலோசித்து உரிய சிபாரிசுகளைச் செய்வதற்கு இந்தத் தெரிவுக்குழுவை அமைப்பதாகவே நாடாளுமன்றப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.நாட்டின் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில், நல்லிணக்கத்துடன் சமாதானத் தீர்வை எட்டுவது, அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது, அதற்கேற்ப அரசமைப்பை மாற்றுவது போன்ற விடயங்களை ஆராய்ந்து உரிய சிபாரிசுகளைச் செய்வதற்கு இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படுவதாக அதன் கருத்துரை (வுநசஅள ழக சநகநசநnஉந) மாற்றப்படவேண்டும். அவ்வாறு அந்த இலக்கை மாற்றுவீர்களாயின், ஒருபுறம் அரசுத் தலைமையுடன் தீர்வுக்கான பேச்சுகளில் ஈடுபட்டுக்கொண்டு மறுபுறம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலும் பங்குபற்றுவது குறித்தும் தமிழ்க் கூட்டமைப்பு சாதகமாகப் பரிசீலிக்கும் என சம்பந்தன் பதிலளித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை செவிமடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அச்சந்திப்பில் தம்முடன் இருந்த தமது செயலாளர் லலித் வீரதுங்கவிடமும், அமைச்சர் நிமல் சிறிபால சில்வாவிடமும் சம்பந்தனின் கோரிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலிக்கும்படி பணிப்புரை விடுத்தார் எனவும் தெரியவருகிறது.

சம்பந்தனின் கருத்துக்கு ஏற்ப நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நோக்கத்துக்கான கருத்துரையை மாற்றியமைக்க முடியுமா என்பது குறித்து கவனம் எடுக்கும்படி தம்மை ஜனாதிபதி நேரில் தொடர்பு கொண்டு பணித்தார் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸும் பின்பு சம்பந்தனுக்கு தெரியப்படுத்தினார் எனவும் தெரியவருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று அல்லது நாளை கொழும்பில் நடைபெறும்போது இந்த விடயங்கள் குறித்து மற்யை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சம்பந்தன் விளக்கமளிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment