Tuesday, September 20, 2011இந்தியாவுக்கு யாத்திரை சென்றபோது காணாமற்போன இலங்கையர்களில் ஒருவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிடுகின்றது.
அவரைத் தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக பிரதி உயர்ஸ்தானிகர் பாலித்த கனேகொட தெரிவித்தார்.
அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்த போது காணாமற்போனவர்களில் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாலித்த கனகொட தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து யாத்திரை சென்றவர்களில் காணாமற்போன நால்வரில் ஒருவர் மாத்திரம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இவர் கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல் காணாமற்போயுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment