Wednesday, September 7, 2011

Rajiv assassination convict Nalini shifted to Vellore Prison:-புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு நளினி மாற்றம்:!

Wednesday, September 07, 2011
Rajiv assassination convict Nalini shifted to Vellore Prison:-புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு நளினி மாற்றம்: கணவருடன் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 3 பேரின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில், இவர்களது தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு 8 வாரம் இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனை கைதியான முருகனின் மனைவி நளினி புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய நளினி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இவர் கடந்த 17-ந் தேதி சிறை துறை அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் ஒரு கோரிக்கை மனு அனுப்பி இருந்தார். அதில், தனது கணவர் முருகன் தூக்கு தண்டனை கைதியாக மரணத்தை எதிர்நோக்கியுள்ளார். நான் அவரை பார்த்து பேசுவதற்கும், அவருடன் இருப்பதற்கும் எனக்கு அனுமதி அளிக்க வேண்டும். இதற்கு வசதியாக என்னை வேலூர் பெண்கள் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை சிறை துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.

இன்று புழல் சிறையில் இருந்து நளினி வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். காலை 8 மணி அளவில் பலத்த பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறிது காலம் நளினி வேலூர் சிறையில் இருப்பார் என்று சிறை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சிறை துறை டி.ஜி.பி. டோக்ரா கூறும்போது, நளினியின் விருப்பத்துக்கு இணங்க, சிறை விதிமுறைகளுக்கு உட்பட்டு நளினி முருகனை சந்தித்து பேச அனுமதி அளிக்கப்படும் என்றார்.

நளினி முதலில் வேலூர் பெண்கள் சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது 15 நாட்களுக்கு ஒருமுறை முருகனை சந்தித்து பேச அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பு கருதி நளினி சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அதற்கு பிறகு நளினி, முருகன் சந்திப்பு நடக்கவில்லை என்பது குறிப்பிட்டதக்கது.

Rajiv assassination convict Nalini shifted to Vellore Prison!

Nalini, the life convict in the Rajiv Gandhi assassination case, was shifted from a Chennai jail to the high security Vellore Prison on Wednesday where her husband and death row convict in the same case, Murugan, is lodged.

Nalini, who was shifted to the Puzhal prison here last year following her complaint of harassment by authorities, was moved back to the Vellore Prison this morning, police said.

Nalini was among the four convicts awarded death sentence in the former Prime Minister’s assassination case but it was commuted to life. The other two death row convicts are Santhan and Perarivalan.

No comments:

Post a Comment