Monday, September 19, 2011

மருத்துவரின் Ôதுரதிருஷ்டÕ நம்பிக்கை குழந்தையின் உயிரை பறித்தது!

Monday, September 19, 2011
பெய்ஜிங் : சீனாவில் மருத்துவரின் Ôதுரதிர்ஷ்ட நம்பிக்கைÕ ஒரு குழந்தையின் உயிரை பறித்துள்ளது. இதையடுத்து, ரூ.1.5 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் குழந்தையின் தாய்.
சீனாவின் குவாங்டாங் மாகாணம் யாங்ஜியாங் நகர மருத்துவமனையில் பிரசவத்துக்காக கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அனுமதிக்கப்பட்டார் ஒரு கர்ப்பிணி. அடுத்த நாள் (13) Ôபேய் திருவிழாÕ என்பதால் அந்த நாளில் குழந்தை பிறப்பது துரதிர்ஷடம் என அம்மருத்துவமனை டாக்டர் ஜெங் யுவன்னா கூறியுள்ளார்.

இதன்படி 14ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையின் இதய துடிப்பை உணர முடியாமல் போனது. அபாயகட்டத்தில் இருந்த குழந்தை 3வது நாளில் இறந்தது. இதையடுத்து, 13ம் தேதி பிரசவம் பார்க்க டாக்டர் மறுத்ததால்தான் குழந்தை இறந்து விட்டதாக அதன் குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர். அத்துடன் நஷ்ட ஈடாக ஸி1.47 கோடி தர டாக்டருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளனர். இந்நிலையில், குழந்தையின் தாய் கேட்டுக் கொண்டதாலேயே பிரசவத்தை ஒத்தி வைத்ததாக டாக்டர் கூறியுள்ளார்.

தலை ஒட்டிய இரட்டையர் 50வது பிறந்த நாள் சாதனை

நியூயார்க்: தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர் 50வது பிறந்த நாள் கொண்டாடுவதன் மூலம் உலகின் அதிக வயதுள்ள ஒட்டிப் பிறந்தவர்கள் என்ற சாதனை படைக்கின்றனர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்தவர்கள் லோரி, ஜார்ஜ். வயது 50. பிறக்கும்போதே தலை ஒட்டிப் பிறந்தவர்கள். மூளையின் முன்பகுதி, ரத்தத் தமனிகள் ஆகியவை ஒட்டியிருந்ததால் பிரித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்களால் அறிவிக்கப்பட்டவர்கள் இவர்கள்.

தலை ஒட்டிய நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். லோரி, ஜார்ஜ் இரட்டையரின் 50வது பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. 50 ஆண்டுகளாக வாழ்வதன் மூலம் உலகின் அதிக வயதுள்ள ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்ற பெருமையை பெற்றுள்ளனர். லோரி 5 அடி 1 அங்குலமும், ஜார்ஜ் 4 அடி 4 அங்குலமும் இருப்பதால் தலைகள் ஒட்டிய நிலையில் உயர வித்தியாசம் காரணமாகவும் மிகவும் சிரமத்துடன் வாழ்க்கையை கழித்து வந்துள்ளனர். எனினும், லோரி சிறந்த ஸ்நோ பவுலர். ஜார்ஜ் சிறந்த மேற்கத்திய பாடகர்.

தங்களது 50வது பிறந்த நாளை லண்டனில் கொண்டாட இந்த இரட்டையர் முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதுபற்றி லோரி கூறுகையில், ‘‘ஒட்டிப் பிறந்து சாகும் வரை அதேகதிதான் என்று தெரிந்தாலும் நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சாதாரண மனிதரின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விட முடிவு செய்தோம். 30 வயதுக்கு மேல் வாழ்வோம் என்று டாக்டர்களும் நம்பவில்லை’’ என்றார்.

No comments:

Post a Comment