Wednesday, September 21, 2011

பூமியை நோக்கி பாய்கிறது செயலிழந்த செயற்கை கோள்!

Wednesday, September 21, 2011
வாஷிங்டன் : கடந்த 20 ஆண்டுகளாக பூமியைச் சுற்றிக் கொண்டிருந்த ஒரு செயற்கைக் கோள் செயலிழந்து விட்டதாகவும் அது பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1991ம் ஆண்டு Ôஅப்பர் அட்மாஸ்பியர் ரிசர்ச் சேட்டிலைட்Õ (யுஏஆர்எஸ்) என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. ரூ.3,525 கோடி செலவில் அனுப்பப்பட்ட இது ஓசோன் படலம் மற்றும் பூமியின் வளி மண்டலத்தைப் பற்றி ஆராய்ந்து வந்தது.
இது நாசா விஞ்ஞானிகளால் கடந்த 2005ம் ஆண்டு செயலிழக்க வைக்கப்பட்டது. அதன் பிறகு அது பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

பேருந்து அளவில் உள்ள அந்த செயற்கைக்கோள் வரும் வெள்ளிக்கிழமையன்று பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாள் முன்னதாகவோ அல்லது பின்போ வரவும் வாய்ப்பு உள்ளது. பூமியை வந்தடையும்போது 26 பெரிய துண்டுகளாக உடையும். பூமியின் 75 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ள கடல் பகுதியில் விழ அதிக வாய்ப்பு உள்ளது. தவறினால் வடக்கு கனடாவுக்கும் தென்னமெரிக்காவின் தென்பகுதிக்கும் இடையில் பூமியின் மீது விழவும் வாய்ப்பு உள்ளதாக நாசா கூறியுள்ளது.
அவ்வாறு விழும்போது 3,200ல் ஒரு பங்கு மனிதர்கள் மீது விழுந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment