Thursday, September 22, 2011

பிளவடையும் ஜே.வி.பி உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைய முடியும் - நிமால் சிறிபால!

Thursday, September 22, 2011
பிளவடையும் ஜே.வி.பி உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள முடியும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சியில் இணைந்து கொள்ள சந்தர்ப்பம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியில் இணைந்து கொண்டு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், எவருக்கும் தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி உட்கட்சி முரண்பாடுகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை அமோக வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment