Friday, September 02, 2011
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவதூறு செய்த நபர் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதாகை ஒன்றில் ஸ்பேய் பெய்ன்டைப் பயன்படுத்தி ஜனாதிபதிக்கு விரோதமான வகையிலும் அவதூறு ஏற்படும் வகையிலும் வாசகங்களை குறித்த நபர் எழுதியதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது.
குறித்த நபரை எதிர்வரும் 9ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜா எல பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.ஜீ. ரொசான் மாலிந்த என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் விரோதமான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாக காவல்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த சந்தேக கொரியாவில் வீசா காலாவதியானதன் பின்னரும் தங்கியிருந்து அந்நாட்டு நீதிமன்றில் தண்டிக்கப்பட்டவர் எனக் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment