Wednesday, September 28, 2011கொழும்பு:யாழ். நீதிமன்றத்திற்குள் வைத்து கைதியொருவர் மீது தாக்குதல் நடாத்தியமை தொடர்பில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஏழு பொலிஸாரும் தலா 50ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல யாழ். நீதிமன்றம் இன்று புதன்கிழமை அனுமதி வழங்கியது.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 2 பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட்ட 7 பொலிஸ் உத்தியோகத்தர்களுமே இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 19ம் திகதி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காகக் கொண்டுவரப்பட்ட சந்தேக நபர் ஒருவர் சட்டத்தரணிகள் முன்னிலையில் பொலிஸாரால் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக பொலிஸ் அதிகாரிகளை சேவையிலிருந்து இடைநிறுத்துமாறு பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் பணிப்புரை விடுத்திருந்தார்.
இந்நிலையில், அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட போது பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் கடந்த 20ம் திகதி முதல் தமது பணிகளைப் பகிஷ்கரித்து வந்தனர். எதிர்காலத்தில் நீதிமன்றத்தினை அவமதிக்கக் கூடிய இவ்வாறான செயல்கள் நடைபெறாது என்ற உத்தரவாதம் வழங்கப்படும் வரையில் தமது பகிஷ்கரிப்புத் தொடருமென அவர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், தங்களது பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தைத் தொடர்வதா? இல்லையா என்பது குறித்து நாளை கூடி ஆராயவுள்ளதாக யாழ். சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment