Wednesday, September 28, 2011

மூவருக்கு பிணை - வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு!

Wednesday,September 28, 2011
கொழும்பு:கல்முனை கடற்பரப்பில் கடந்த 11ஆம் திகதி படகின் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டதாக கைதான 36 சந்தேகநபர்களில் மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கம்புலி முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட போது பெண்ணொருவருக்கும், இரண்டு குழந்தைகளுககும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்தபோது அவர்களை கல்முனை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்ததாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் அனைவரும் நிரபராதிகள் எனவும் அவர்களை நாட்டிலிருந்து அழைத்துச் செல்வதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்ட நபரை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்ய முடியாமல் போனதாகவும் அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த சந்தேகநபர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்தே கைதுசெய்யப்பட்டதாகவும் அவர்கள் நாட்டின் எந்தவொரு கடற்பரப்பிற்கு செல்வதற்கும் உரிமை உள்ளமையால் அவர்களை
கைது செய்யதமையானது சட்டவிரோதமானது எனவும் மற்றுமொரு சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இந்த சந்தேகநபர்களில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் இருப்பதாகவும் அவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் இந்தச் சந்தர்ப்பத்தில் பிணை
வழங்கக்கூடாதெனவும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரி்க்கை விடுத்தார்.

வழக்கு ஒக்டோபர் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment