Sunday, September 4, 2011

சிறுமி துஷ்பிரயோகம்-முன்னாள் விமானப்படை உறுப்பினர் கைது::கடமை நேரத்தில் மதுபோதை-நால்வர் கைது::ஊரணி பொலிஸ் காவலரண் தாக்குதல் ஆறு பேர் கைது!

Sunday, September 04, 2011
மாத்தறை கல்வி வலயத்தில் பரீட்சை தொடர்பாடல் மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்ட பாடசாலை வளாகமொன்றில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் விமானப்படை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்னர்.

பரீட்சை நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்ரபிலின் நண்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

தமது தாயாருடன் பாடசாலை வந்திருந்த சிறுமியே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடமை நேரத்தில் மதுபோதை-நால்வர் கைது!

கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்த பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பேர் மாத்தறை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை கல்வி வலயத்தில் பரீட்சை தொடர்பாடல் மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்ட பாடசாலை ஒன்றில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யபட்டவர்களில் காவலாளி, பொலிஸ் சார்ஜன் மற்றும் பொலிஸ் கான்ரபில் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊரணி பொலிஸ் காவலரண் தாக்குதல் ஆறு பேர் கைது!

மட்டக்களப்பு ஊரணி பொலிஸ் காவலரண் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.

அண்மையில் அமைதியின்மையை முறையில் செயற்பட்ட குழுவினர் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்திருந்ததாக குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்களை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment