Sunday, September 4, 2011

ஐ. நா படையினர் மீது பலியல் குற்றச்சாட்டு!

Sunday, September 04, 2011
ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயப்படும் அமைதி காக்கும் படையினரால் பல்வேறு பாலியல் குற்றங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த சிறுமிகளின் வறுமையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி பாலியல் குற்றங்களில் ஈடுப்பட்டதாக விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தை தளமாக கொண்டுள்ள சேப் த சைல்ட் என்ற நிறுவனத்தினால் கணக்கெடுப்பின் படி, 10 இல் 8 சிறுமிகள் வறுமை காரணமாக பெற்றோரின் அனுமதியுடனேயே பாலியலுக்கு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அற்கு ஈடாக சிறுமிகளுக்கு உணவு மற்றும் பிறதேவைகள் பாதுகாப்பு படையினரால் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாலியல் வல்லுறுவை மேற்கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொமோண்டர் தரத்தை கொண்டுள்ளவர்கள் என விக்கி லீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment