Saturday, September 10, 2011

இராணுவ வீரர்கள் மூவர் உள்ளிட்ட எட்டுபேர் விளக்கமறியலில்!

Saturday, September 10, 2011
அனுராதபுரம் ஒயாமடுவையில் " தேசத்துக்கு மகுடம்" கண்காட்சி நடைபெறவுள்ள காணியில் புதையல் தோண்டியதாக சந்தேகத்தின் பேரில் கைதான இராணுவ வீரர்கள் மூவர் உள்ளிட்ட எட்டு பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சந்தேகநபர்களை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் மேலதிக நீதவான் சந்திம எதிரிமான்ன உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள் எட்டுப் பேரும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட இராணுவ வீரர்கள், ஒயாமடுவை தேசத்திற்கு மகுடம் கண்காட்சி இடம்பெறவுள்ள காணியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்கள் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சந்தேகநபர்கள் கடந்த ஏழாம் திகதி இரவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment