Saturday, September 10, 2011

குற்றவியல் சட்டக் கோவையில் திருத்தங்களை மேற்கொள்ள இணக்கம்!

Saturday, September 10, 2011
குற்றவியல் சட்டக் கோவையில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபெவர்தன தெரிவிக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்டு தடுத்து வைத்திருப்பதற்கான கால எல்லையை நீடித்தல் உள்ளிட்ட யோசனைகளுடன் பாராளுமன்றத்தில் நேற்று திருத்தங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், எதிர்கட்சியினரின் விரோதம் காரணமாக அது தொடர்பான விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது இந்த விடயம் குறித்து அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

அவசரகால சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலர் விடுதலையாகி செல்வதாக தெரிவித்த பதில் அமைச்சரவைப் பேச்சாளர் எனினும் அதில் பாரதூரமான பிரச்சினை நிலவுவதாக குறிப்பிட்டார்.

அத்தகையவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்காக ஏதேனும் வழிமுறை காணப்பட வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலைப்பாட்டிலேயே இருந்து கொண்டு அனைரையும் வெளியில் கொண்டுவர மேலும் ஒரு பிரிவினர் முயற்சிப்பதாகவும் பயங்கரவாதத்தை தூண்டி அதற்கு உதவி புரிந்த தரப்பினரே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபெவர்தன கூறினார்.

ஜெனீவா மனித உரிமை விவகார கூட்டத்தொடரை இலக்கக் கொண்டு அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதா என்று ஊடகவியலாளர் ஒருவர் வினவினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெனீவா பேரவையில் கூட்டத்தொடர்கள் நடைபெறுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையில் யுத்தம் இடம்பெறுவதால் இந்த நாட்டுத் தரப்பினர் அதில் கலந்துகொள்ள இடமளிக்கப்படமாட்டது என தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

இலங்கை மீது தடைகள் விதிக்கப்படும் என கூறியிருந்த போதிலும் கீழ் படியாத அரசாங்கம் தனது தீர்மானங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்றும் யுத்தத்தின் போது இதனால் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை எனவும் பதில் அமைச்சரவைப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து அவசரகால சட்டம் நீக்கப்படுவதாக கூறி இரண்டு வாரங்களுக்குள் புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக யோசனை சமர்ப்பிக்கப்படுவதாயின் இலங்கையின் நிலை என்னவென மற்றுமொறு கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, நாட்டில் பயங்கரவாதம் எதுவுமில்லை எனினும் இரகசியமான முறையில் நாட்டிற்குள் தேவையற்ற விடங்களை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment