Sunday, September 25, 2011

அரசியல்வாதிகளுக்கு அறிவுரை கூறவிளையும் பொதுமக்கள்!

Sunday, September 25, 2011
நாட்டில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் தற்போது அபிவிருத்தித் திட் டங்கள் பல முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கு, தெற்கு என சகல பகுதிகளிலும் அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளை மேற் கொண்டு வருகிறது. கடந்த முப்பது வருடங்களாக யுத்தம் காரணமாக நமது நாடு அபிவிருத்தியில் பின்னடைவு கண்டது. எமது நாட்டை விடவும் வளம் குன்றிய வறிய நாடுகள் பலவும் எம்மை விட முன்னோக்கிச் சென்றுவிட்டன. ஆனால் நாங்கள் இன்னமும் யுத்தம் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்.

யுத்தம் நடைபெற்றபோது அழிவுகள் குறித்துப் பேசியோர் இன்று அது நிறை வுக்குக் கொண்டுவரப்பட்டதும் அதன் தாக்கம், கைக்கொண்ட விதம் பற்றிப் பேசிவருகின்றனர். யுத்தம் முடிவடைந்துள்ளதால் அடுத்ததாக அபிவிருத்தி, மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் குறித்துப் பேசச் சிலர் பின்னடிக்கின்ற னர். அவர்கள் பெரும்பாலும் யுத்தம் மூலமாக ஏதோவொரு வகையில் அதனை வைத்து இலாபமடைந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

குறிப்பாக நமது தமிழ் அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் யுத்த காலத்தில் மக்களது வாழ்க்கை நிலை சீரழிகிறது என்று கூக்குரலிட்டனர். யுத்தத்தை எப் படியாவது முடிவிற்குக்கொண்டுவர வேண்டும் எனக் குரல் எழுப்பினர். இப் போது அரசாங்கம் அந்தக் கொடிய யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்துள் ளது. ஆனால் இவர்கள் இப்போதும் பொய்யாகக் காரணங்களைக் கூறி அரசின் அபிவிருத்திப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய மனநிலையைக் கொண்ட அரசியல்வாதிகளுக்கு இன்று பொதுமக்கள் அறிவுரை கூற விழைந்துள்ளனர். குறிப்பாக வடக்கில் அரசின் அபிவிருத் திப் பணிகளை முடக்கும் வகையில் இவர்களது செயற்பாடுகள் இன்று அமைந்துள்ளது. மக்கள் அமைதியாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதாகக் காணப்பட்ட இவர்களது கருத்து இன்று அதே மக்கள் நிம்மதி யாக வாழ முற்படுகையில் எதிர்மாறாக உள்ளது கவலைக்குரியதாக உள்ளது.

யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கு மக்கள் மட்டுமல்ல முழுநாட்டு மக்களுமே நிம்மதியாகவும், பயமற்ற சூழலிலும் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளை துரிதமாக முன்னெ டுத்து வருகிறது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் அழிவுக்குள் ளான மக்களின் இருப்பிடங்களைத் திருத்தியமைத்து இதுவரை காலமும் இட ம்பெயர்ந்து அவல நிலையில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்களை உயர் த்த அரசாங்கம் அரும்பாடுபட்டு வருகிறது.

அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் இடையூ றாக நிற்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. தமது மக்கள் மீண்டும் இயல்பு வாழ்விற்குத் திரும்பி தமது வாழ்வாதாரங்களைப் பெருக்கி நிம்மதியா கத் தமது சொந்த வீடுகளில் வாழ்வதை தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் விரும்பவில்லையா என்பதே எமது கேள்வியாகும்.

இந்தக் கேள்வி இப்போது சாதாரண மக்களது மனங்களிலும் எழத் தொடங்கிவிட் டது. இதுவரை காலமும் கஷ்டப்பட்டபோது தம்மை ஏனென்றும் வந்து பாராதிருந்த பல தமிழ்த் தலைவர்கள் அரசாங்கம் செய்யும் அபிவிருத்திப் பணிகளுக்கும், தமக்கு வழங்கும் வாழ்வாதார உதவிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருவது குறித்து மக்கள் விசனமும், கவலையும் தெரிவித்துள்ள னர். தற்போது தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் யாராவது வடக்கிற்கு வருகை தந்தால் தயவுசெய்து எமக்குக் கிடைப்பதைத் தடுக்க வேண்டாம் என மக்கள் நேரடியாகவே கேட்கின்றனர்.

உண்மையில் இவ்விடயம் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். கொடிய யுத்தம் வாட்டியெடுத்து மீண்டெழுந்திருக்கும் மக்களை இனியாவது தமிழ் அரசியல் தலைமைகள் எனத் தம்மைத்தாமே கூறிக்கொள்வோர் வாழவிட வேண்டும். அவர்களுக்குக் கிடைக்கும் உதவிகளைக் கிடைக்கவிடாது தடுக் கக் கூடாது.

இதுவரை காலமும் அம்மக்கள் பட்ட துன்பங்களை மனதிற்கொண்டு இனியாவது அவர்களை வாழவிடவேண்டும். இனியுமொரு அழிவை நோக்கிச் செல்ல அம்மக்களுக்கு மனதில் தைரியமோ அல்லது உடம்பில் தெம்போ இல்லை. அத்தகைய நிலையிலுள்ள அப்பாவி மக்களை வைத்து இனியும் அரசியல் பிழைப்பு நடத்துவது முறையாகாது.

இப்போதே தமிழ் மக்கள் தமிழ் அரசியல் தலைமைகளைத் தட்டிக்கேட்க ஆரம் பித்துவிட்டார்கள். இனியும் அம்மக்களை வைத்து சுயலாபம் தேட முனைந் தால் விபரீத விளைவுகளையே சந்திக்க நேரிடும். அரசாங்கம் தொடர்பாக இனியும் அபாண்டமாக அம்மக்களுக்கு எடுத்துரைக்கும் முயற்சியை தமிழ்க் கூட்டமைப்பினர் கைவிடவேண்டும். அம்மக்களுக்கு நல்லது கிடைக்கும் போது அதைத் தடுக்க முனைவது பொருத்தமற்றதாகும்.

No comments:

Post a Comment