Sunday, September 25, 2011

பூகோள ஒருமைப்பாட்டு மேம்பாடு இலங்கையின் பங்களிப்பிற்கு பில் கிளின்டன் பாராட்டு!

Sunday, September 25, 2011
பூகோள ஒருமைப்பாட்டு மேம்பாட்டுக்காக இலங்கையிடம் இருந்து கிடைக்கும் பங்களிப்பை வரவேற்பதாக அமெரிக்க முன் னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் தெரிவித்துள்ளார்.

கிளின்டன் பூகோள பிரவேசம் அமைப்பின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி சுமுகமான முறையில் வரவேற்றுள்ளார்.

அத்துடன் சமூக ஒருமைப் பாட்டுக்கு இலங்கையிலிருந்து கிடைக்கும் பங்களிப்பிற்கு பில் கிளின்டன் தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிளின்டன் பூகோள ஒருமைப்பாட்டு அமைப்பின் ஊடாக 180 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பலதரப்பட்ட அனுகூலங்களைப் பெற்றுள்ளனர்.

ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி பொருளாதார நெருக்கடி உலகளாவிய காலநிலை அனர்த்தங்கள் உலக மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் மற்றும் நானாவித பிரச்சி னைகள் குறித்து விரிவாக கருத்து வெளி யிட்டார். இவ்வாறான சவால்களை எதிர்கொள்வதற்கு உலகளாவிய ஒற்றுமை அத்தியாவசியம் என்ற காரணத்தையும் பில் கிளின்டன் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment