Sunday, September 18, 2011

சாவகச்சேரியில் மர்ம மனிதன் எனக் கூறி இராணுவத்தினரால் இளைஞன் ஒருவர் பிடிகடகப்பட்டு சாவகச்சேரி காவற்றுறையினரிடம் ஒப்படைக்கப்பு!

Sunday, September 18, 2011
யாழ். சாவகச்சேரியில் நேற்று மர்ம மனிதன் எனக் கூறி இராணுவத்தினரால் இளைஞன் ஒருவர் பிடிகடகப்பட்டுசாவகச்சேரி காவற்றுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் பலாலி படைத்தலைமையக ஊடகப்பிரிவினர் நேற்று குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்க்கு அழைத்துச் சென்று விளக்கமளித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் இராணுவத்தினர் தெரிவித்ததாவது.

சாவகச்சேரி பருத்துறை வீதியில் கனகம்புளியடிச் சந்திக்கு சுமார் 500மீற்றர் தொலைவிலுள்ள 11வது படையணி முகாமிற்க்கு அருகில் பற்றைக் காடு நிறைந்த பகுதி ஒன்றில் இன்று காலை 8 மணியளவில் இளைஞன் ஒருவன் உடையில்லாமல் நின்று கொண்டிருந்ததாகவும் அவரைப் பிடிப்பதற்கு படையினர் முயற்சித்த வேளை அவர் அருகிலிருந்த இராணுவ முகாமை நோக்கி ஓடியுள்ளார். பின்னர் இளைஞன் பற்றைக் காட்டுப் பகுதியில் மடக்கிப் பிடிக்கப்பட்டு சாகவச்சேரி காவற்றுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக படையினர் நேற்று ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞனைப் பிடித்து இராணுவத்தினர் விசாரித்த போது ,அவ் இளைஞன் சங்கத்தானையைச் சேர்ந்தவர் எனவும் அப் பகுதியால் செல்லும் பெண்களை மடக்குவதற்காகவே அங்கு பதுங்கியிருந்நதாகவும் ,தான் தனது பாதுகாப்பிற்காக இராணுவ முகாம் நோக்கி ஓடியதாகவும் தெரிவித்ததாகப் படையினர் கூறினர்.

இராணுவத்தினர் சாவகச்சேரி காவற்றுறையினரிடம் ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்றனர். குறித்த இளைஞனை இராணுவத்தினர் மடக்கிப்பிடித்து ஒப்படைத்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதுடன் அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தவுள்ளதாகவும் காவற்றுறையினர் தெரிவித்தனர்.

மர்மமனிதன் விடயத்தில் இராணுவதினர் மீது மக்கள் வீண் பழி சுமத்துகின்றனர். மர்ம மனிதர் என்று ஒருவர் இல்லை என மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டனர். தொடர்ந்தும் இராணுவத்தினர் இவ்வாறு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தனர்.

இச் சம்பவம் இடம்பெற்ற இடத்தையும் இராணுவத்தினர் ஊடகவியலாளர்களுக்குக் காட்டினர். பருத்தித்துறை வீதியில் கனகம்புளியடிச் சந்தியிலிருந்து சாவகச்சேரி வரும் வழியில் 500 மீற்றர் தொலைவில் சிறிலங்காப் படையினரின் 11வது படையணி முகாம் ஒன்று உள்ளது. அதனைச் சுற்றி பற்றைக் காட்டுப் பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றதாகப் படையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment