Thursday,September 15,2011
இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் கூறப் பட்டுள்ள படி சர்வதேச விசாரணைக் குழுவை உடனடியாக நியமிக்க வேண்டுமென்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
இறுதிப் போரின் போது 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டமை போர்க்குற்றம் என்று அறிக்கை கூறுகின்றமையால் அது குறித்து முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மனித உரிமைகள் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சர்வ தேச விசாரணைக்கு மனித உரிமை சபை உடனடியாக உத்தரவிட வேண்டும். அதைவிடக் குறைந்த எந்தவொரு நடவடிக்கையும் பொறுப்புக்கூறும் நடவடிக்கையை வெட்கக்கேடான தாக்கிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் மனித உரிமைகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இது என்று அனைத்துலக மன்னிப்புச் சபையும் வலியுறுத்தியுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் அனைத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் சாம் சரிபி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் நீதிக்காக மிக நீண்டகாலம் காத்திருந்துவிட்டார்கள் என்றார்.

No comments:
Post a Comment