Friday, September 16, 2011

இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திப்பது தொடர்பில் புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன

Friday,September,16,2011
இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திப்பது தொடர்பில் புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இலங்கைக்கு விஜயம் செய்யும் இராஜதந்திரிகள் தற்போது யாரை வேண்டுமானாலும் சந்திக்க முடியும் என்ற நிலைமையே காணப்படுகின்றது.

எனினும், இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பாக யார் யாரை சந்திக்க முடியும் என்பது குறித்த பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட உள்ளதாகவும் பதில் அமைச்சரவைப் பேச்சாளர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளின் பதவிப் பட்டியல் ஒன்று தயாரிக்கப்படவுள்ளது.

குறித்த பதவிகளை வகிக்கும் நபர்கள் மட்டுமே வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும்.

இராஜதந்திரிகள் கடைநிலை ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதனால் நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் தெளிவுபடுத்தியதாக, அமைச்சர் யாபா சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment