Sunday, September 4, 2011

ஜே.ஆர் மற்றும் பிரமேதாசவிற்கு உளவு பர்த்த காரணத்தினால் அமிர்தலிங்கம் கொலை செய்யப்பட்டார்:புனர்வாழ்வு பெற்ற புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தகவல்களை வழங்கியுள்ளனர்!

Sunday, September 04, 2011
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ஆர்.பிரேமதாச ஆகியோருக்கு உளவு பார்த்த காரணத்தினால் புலிகள் படுகொலை செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

1987ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக அமிர்தலிங்கம், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் காமினி திஸாநாயக்க ஆகியோரை இரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது. புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தகவல்களை வழங்கியுள்ளனர்.

அமிர்தலிங்கத்தின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிக்குமாறு புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கிட்டு எனப்படும் கிருஸ்ணமூர்த்தி மற்றும் அலோசியஸ் லியோன் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜே.ஆர்.ஜயவர்தன பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டதன் பி;ன்னர் அமிர்தலிங்கம் ஆர்.பிரேமதாசவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியுள்ளார்.

1989ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் திகதி பிரேமதாசவின் இல்லத்தில் வைத்து அமிர்தலிங்கம் மற்றும் யோகஸ்வரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவசரகாலச் சட்ட விவாதத்தின் போது பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து அமிர்தலிங்கம் உரையாற்ற வேண்டுமென பிரமேதாச கேட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரமேதாசவின் கோரிக்கைக்கு இணங்க அமிர்தலிங்கம் அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றியுள்ளார். நாட்டில் தலைதூக்கியுள்ள பயங்கரவாதம் ஆபத்தானது எனவும், நிலைமை நீடித்தால் அடுத்த அவசரகாலச் சட்ட விவாதத்தில் சில வேளைகளில் தம்மால் உரையாற்ற முடியாத சூழ்நிலை உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரமேதாசவிடம் கடமையாற்றிய பாபு எனப்படும் புலிகளின் உளவாளி, இந்த சந்திப்புக்கள் குறித்து மாத்தையாவிற்கு அறிவித்துள்ளார்.
இதனை அறிந்து கொண்ட வேலுப்பிள்ளை பிரபாகரன், ஜனாதிபதி பிரேமதாச, அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரை கொலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அலோசியஸ் லியோன், விசு மற்றும் சிவகுமாரன் ஆகிய புலி உறுப்பினர்கள் யோகேஸ்வரனின் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யோகேஸ்வரனின் இல்லத்தில் அமிர்தலிங்கம் மற்றும் சிற்சிதம்பரம் ஆகியோர் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்திக் கொண்டிருந்தனர்.

திடீரென வீட்டுக்குள் பிரவேசித்த மூன்று புலி உறுப்பினர்களும் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் மற்றும் சிற்சிதம்பரம் ஆகியோர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினர்.

புலி உறுப்பினர் ஒருவரின் குறிப்பேட்டுத் தகவல்களின் அடிப்படையில் இந்த தகவல்களை இலங்கை ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டு வருகின்றது

No comments:

Post a Comment