Friday, September 9, 2011

பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது!

Friday, September 09, 2011
இலங்கை:கடுவெல கொத்தலாவல பகுதியில் பாலியல் தொழில் நடத்திச் செல்லப்பட்ட விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் நான்கு யுவதிகள் உட்பட ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

நுகேகொடை பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மத்துகம, அம்பலாந்தோட்டை, எல்பிட்டிய மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு யுவதிகளே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வைத்திய அதிகாரி என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு குறித்த பாலியல் தொழில் விடுதியை நடத்திச் சென்ற அரநாயக்க பகுதியைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட இருவரும் இதன்போது கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment