Wednesday, September 28, 2011கைதிகளை இந்தியாவிற்கு யாத்திரை அனுப்பி வைப்பது குறித்து சிறைச்சாலைத் திணைக்களம் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
நன்நடத்தையுடைய கைதிகள் இவ்வாறு யாத்திரைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைதிகள் நலத்திட்ட சங்கத்தின் உறுப்பினர் ஒருவரினால் இந்த யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனையை சிறைச்சாலைகள் மற்றும் கைதிகள்புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர ஏற்றுக்கொண்டுள்ளார்.
சாதாரண குற்றச் செயல்களுக்காக தண்டனை அனுபவித்து வரும் 30-40 கைதிகள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வளவு காலம் யாத்திரைக்காக ஒதுக்கப்படும் என்பது பற்றிய தீர்மானம் எடுக்கப்படவில்லை. இந்தியாவில் காணப்படும் பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தளங்களுக்கு யாத்திரை செய்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவதில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. வீசா பெற்றுக் கொள்வது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது எனச் சிறைச்சாலை அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment