Friday 23rd of September 2011அகலவத்தை, தாபிலிகொட பகுதியில் கப்பம் கோரி தம்பதியினர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மதுகம பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் குறித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அகலவத்தை, தாபிலிகொட பகுதியிலுள்ள வீட்டுக்குச் சென்று தம்பதியினரை கடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்கள் கோரிய 78 இலட்சம் ரூபா கப்பத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கடத்தப்பட்ட தம்பதியினர் விடுவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment