Friday 23rd of September 2011ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தினால், இலங்கையின் உண்மையான நிலைமைகள் குறித்து சர்வதேசத்துக்கு எடுத்தியம்ப அரிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அமர்வில் கலந்துக் கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ, பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
இது இலங்கையின் தற்போதை அபிவிருத்தி நிலைமைகள் குறித்து தெளிவுப்படுத்த கிடைத்த அரிய சந்தர்ப்பம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் 66வது வருடாந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக நிவ்யோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ, இன்றைய தினம் தமது உரையை நிகழ்த்தவுள்ளார்.
நேற்று முன்தினம் இந்த மாநாடு ஆரம்பமானது.
மாநாட்டை ஆரம்பித்து உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன், தொடர்சியான காலநிலை மாற்றங்கள், எதிர்காலத்தில் தொடர்ந்தும் சாவாலாக இருக்கும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தமது உரையை நிகழ்த்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment